நிந்திக்க மனமில்லை

நண்பன்
யாரடா
எதிரி
யாரடா
புரியாத
நிலையடா !

நண்பனும்
எதிரியாய்
எதிரியும்
நண்பனாய்
மாறுகின்ற
காலமடா !

விந்தைகள்
நடக்கிறது
வினோதங்கள்
நிகழ்கிறது
வியப்பு
கூடுகிறது !

சந்தையாய்
மாறிவிட்ட
சமுதாயம்
நஞ்சானது
வஞ்சகம்
நிறைந்தது !

அருகிலிருந்தோர்
மறப்பதும்
தள்ளியிருந்தோர்
நினைப்பதும்
நவீனத்தின்
விளைவுகளா ?

விரிசல்கள்
இல்லாமலே
இடைவெளி
உருவாக்கி
ஒதுங்கியோர்
ஓராயிரம் !

பலன் பெறவே
நெருக்கமாக
இருந்தோரை
தேடுகிறேன்
காணவில்லை
இன்றுவரை !

சிரித்துப்
பழகியவர்கள்
சிந்திக்க
வைத்தனர்
நிந்திக்க
மனமில்லை !

நினைவுகள் சில
நீர்த்து உலர்ந்தது
மறைந்து மறந்தது !
ஒற்றை படகாய்
ஒதுங்கி நிற்கிறேன்
ஓய்வில் இருக்கிறேன் !


பழனி குமார்
24.08.2022

எழுதியவர் : சமுதாயம் , பொது , நட்பு (25-Aug-22, 7:21 am)
பார்வை : 107

மேலே