இப்படியும் மனிதர்கள்

*"இப்படியும் மனிதர்கள்"*

🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️



அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தம் பள்ளியில் இருக்கும் கேன்டீன் போஜன் இவற்றையெல்லாம் விடுத்துப் பள்ளி வளாகத்திற்கு வெளியில் உள்ள ஒரு கடையில் வாரத்திற்கு ஒரு நாள் சென்று ஒரு காபி, தேநீர் அல்லது பழச்சாறுகளைக் குடிப்பது வழக்கம். இவ்வாறு குடிப்பதை ஒரு மாற்றத்திற்காக என நினைத்தனர். காலப்போக்கில் கடைக்காரர்கள் மீது கொண்ட நம்பகத்தன்மை காரணமாக வாரம் ஒரு நாள் சென்று குடிப்பதை வழக்கமாக அமைத்துக்கொண்டனர். அப்படிக் குடிக்கச் செல்லும் பொழுது அங்கு இருக்கக்கூடிய காபி கடையில் உள்ளவர்களிடம் இயல்பாகப் பேசக்கூடியவர்களாக இருந்தனர். அன்றைய நாள் ஆசிரியர்கள் மூவர் அந்தக் கடைக்குச் சென்றனர். இருவர் மட்டும் காபி குடித்தனர். ஒருவர் குடிக்கவில்லை. காபி ஆர்டர் செய்யும் பொழுதே ஒருவர் அதற்கான பணத்தைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டார். பேச்சி போக்கில் இதைக் கவனிக்காத மற்றொருவர் வெளியில் பேசச் சென்றுவிட்டார். மூன்றாமவர்
தான் காபி குடிக்கவில்லை என்றாலும் பேச்சு போக்கில் பணம் கொடுக்கவில்லை என்பதாகக் கருதி அவரிடம் பணத்தை எடுத்து நீட்டுகிறார். பணம் கொடுத்த ஆசிரியர் எதற்காகக் கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். காபி குடித்ததற்காக என்று பதிலளித்தார் மூன்றாமவராகிய அந்த ஆசிரியர். நான்தான் முன்பே கொடுத்துவிட்டேனே என்றார் முன்பே பணம் கொடுத்துவிட்ட ஆசிரியர். முதலில் இரண்டு காபிக்குரிய பணத்தை வாங்கிக் கொண்ட கடைக்காரர் பின் மறைவாய் நின்று கொண்டார். பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டவர் கடைக்காரர்களுள் மற்றொருவர். மாறிமாறி நின்ற கடைக்காரர்கள் இருவரும் சிரித்துக்கொண்டே அந்தப் பணத்தை வாங்குகின்றனர். முன்பே பணம் கொடுத்துவிட்டேனே என்று அந்த ஆசிரியர் கூறிய பிறகுதான் அந்தக் கடைக்காரர்கள் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தனர்.
அதன் பிறகு ஆசிரியர்களைக் கண்ட அந்தக் கடைக்காரர்கள் முகத்தில் 'ஈ' ஆடவில்லை. பணத்தைக் கண்டவுடன் அவர்களிடம் இருந்த நம்பிக்கை தடுமாற்றம் கண்டது.
"பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்று சும்மாவா சொன்னாங்க நம் முன்னோர்கள். "
இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
"ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்"
என்பதும் உண்மைதானே!

கதைக்கரு மற்றும் கதை ஆக்கம் முனைவர் க. அன்பு க்கோகிலா

எழுதியவர் : முனைவர் க அன்புக்கோகிலா க (25-Aug-22, 10:44 pm)
சேர்த்தது : KAnbukokila1984
பார்வை : 169

மேலே