310 கொள்ளும் பொறாமையால் புதுத்துன்பம் கூடும் – பொறாமை 8
'வெண்டளை பயிலும் கலிவிருத்தம்'
பூட்டுமரி கண்டம் புனைந்தழுங்கு வார்போலுந்
தோட்டியினைத் தானே சுமக்குங் கயம்போலும்
வாட்டுந் துயர்க’ள்’பல வைய மிசையிருக்கக்
கோட்டமுளோர் வேறா குலந்தமக்குண் டாக்குவரே. 8
- பொறாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”கழுத்தில் பூட்டக்கூடிய இரும்பு வளையம் மாட்டித் துன்பம் அடைபவரைப் போலவும், அங்குசத்தைத் தானே சுமந்து துன்புறும் கொடிய யானை போலவும் வருத்தப்படும் துன்பங்கள் பல இவ்வுலகில் இருக்க,
பொறாமை உள்ள மக்கள் வேறு பல புதுத்துன்பத்தைத் தங்களுக்கு உண்டாக்கி வருந்துவர்” என்கிறார் இப்பாடல் ஆசிரியர்.
அரிகண்டம் - கழுத்தில் மாட்டும் இரும்பு வளையம். தோட்டி – அங்குசம்,
கோட்டம் - பொறாமை. ஆகுலம் - துன்பம்.