309 பொறாமையால் வருந்துவோர்க்குப் பெருந்துன்பம் சேரும் – பொறாமை 7
கலி விருத்தம்
(மா விளம் மா கூவிளம்)
அறமு ளார்கள்போல் அறிஞர் போல்புகழ்
பெறவ ருந்துதல் பெருமை யாயினும்
புறமு ளார்கள்போல் பொருளி லேமென
உறுமவ் வுறுகணே உறுக ணீயுமே. 7
- பொறாமை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”நல் மனப்பாங்கு உள்ளவர்களைப் போல, கற்றறிந்த அறிஞர்களைப் போல் புகழ் பெறப் பாடுபடுவது ஒருவர்க்குப் பெருமைதான்.
ஆனால் பிறரைப் போலப் செல்வம் இல்லையே என்று கொள்ளும் பொறாமையால் வருந்தும் வருத்தம் பெருந் துன்பம் தரும்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
அறம் – நல் மனப்பாங்கு, புறமுளார் - பிறர். பொருள் – செல்வம், பணம்.
உறுகண் - வருத்தம், பெருந்துன்பம். ஈயும் - தரும்