பொறாமைக்கு ஒரு கவிதை
😈😈😈😈😈😈😈😈😈😈😈
*பொறாமைக்கு*
*ஒரு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
😈😈😈😈😈😈😈😈😈😈😈
*பொறாமை*
உடனிருந்தே
குழிப்பரைக்கும்
கடப்பாரை.... !!
தவறான வழிக்கு
அழைத்துச் செல்லும்
தீயநட்பு.....!!
நிம்மதியை
கொன்றுவிடும்
கொலைகாரன்....!!
முதுகில் குத்தும்
கோழை...!!
பாவங்களை மட்டுமே
சேமித்து வைக்கும்
கஜானா ....!!
சந்தர்ப்பம்
கிடைக்கும் போதெல்லாம்
துன்பங்களைக் கொடுக்கும்
வைரஸ்...!!
மனித தன்மைகளை
வெட்டி வீழ்த்தி விடும்
கோடாரி....!!
நிம்மதியை
அரித்துவிடும்
கரையான்....!!
கொண்டவனையே
கொஞ்சம் கொஞ்சமாக
கொள்ளும்
கொடிய விஷம்....!!
வாழ்க்கை பூஞ்சோலை
சின்னபின்னமாக்கும்
புயல் காற்று...!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
😈😈😈😈😈😈😈😈😈😈😈

