இராணுவம்..//
கைப்பிடி மண்ணைக் கூட
களவாடக்கூடாது என
எல்லையில் நிற்கும்
எல்லைச்சாமி அவர்கள்..//
நாட்டின் மூளையில்
எங்கோ ஒருவன்
தூங்கு வேண்டும் என
காவல் காக்கும்
தெய்வம் அவர்கள்..//
தனக்கென்று எந்த
ஒரு ஆசையும் வைத்து
கொள்ளாத பிறர்
வாழ்வை மட்டுமே
அதிகம் எண்ணத்தில்
வைத்து போராடும்
சாமி அவர்கள்..//
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்கும் உயிரை பெரிதாக
நினைக்காத நாட்டிற்காக
உயிர் அர்ப்பணிக்கும்
மாவீரர்கள் இந்த
ராணுவ வீரர்கள்..//

