விநாயகர் துதி

ஒளவையின் அகவலில்
அளவிலா மகிழ்ச்சியில்
உள்நின்று ஒளிரும்
கற்பக விநாயகன்
அகவலை நித்தம்
பக்தியில் உருகி
மனதில் வேழமுகனை
வைத்துப் போற்றிட
கேட்கும் நல்வரங்களை
அள்ளி அள்ளி வழங்கிடுவான்
இடர்கள் போக்கும் தெய்வம்
அவன் காக்கும் தெய்வம்
கதிர் வேலவன் கருத்தில் அமர்ந்த
அவன் முன்னவன் கணபதி
பேதம் பாராது எல்லார்க்கும்
நல்வரங்கள் நல்கும் எளிய
தெய்வம் கணபதி ஏழைபங்காளன்
பெரிய கோவிலிலும் இருப்பான்
அரச மரத்தடியிலும் இனிதே
வீற்றிருப்பான் வந்து தொழுவோரின்
குறைகள் போக்கி வரன்கள் நல்கி
செல்வகணபதி குழந்தைகள் கண்டு
மகிழ்ந்து கும்பிடும் பிள்ளைகணபதி
உச்சிப் பிள்ளையார் அவன்
அருகம்புல்லும் எருக்கம் பூவும்
தந்து அர்ச்சித்து மோதகம்
பிரம்பு பழமும் படைத்தது
பூஜிப்போர்க்கு இம்மை
மறுமைக்கு வழிகாட்டிநிற்பான்
சுந்தர விநாயகன் அவன்
ஓம்கார ரூபன் வேதஸ்வரூபன்

போற்றுவோம் அவன் நாமம்
போற்றி வணங்குவோம்
எல்லை இல்லா வரமருளும்
கலியுக வரதன் விநாயகன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Aug-22, 6:59 am)
Tanglish : vinayagar thuthi
பார்வை : 102

மேலே