விண்வெளியில் புரட்சி
விண்வெளியில்
விண்கலங்களின்
அவசரக்கூட்டம்
நடந்துச்சு...
நமக்கு இனி இங்கு மதிப்பில்லை
நாமெல்லாம் கீழே
இறங்கி விடலாமென்று
அவைகள் முடிவு செய்தன..
காரணம்...
பூமியில் இருந்து வரும்
விலைவாசியின் உயர்வு
விண்வெளியை தொட்டு
சுற்றி சுற்றி வலம் வருவதால்
தங்களின் ஆராய்ச்சியை தொடர்ந்து செய்ய இயலவில்லையென்று
நாசா விண்வெளி
ஆராய்ச்சி மையத்திற்கு தகவல் கொடுத்து விட்டு
பூமியை நோக்கி வேகமாக
வந்து கொண்டு இருக்கிறது...!!
நாசா விஞ்ஞானிகள்
விண்கலங்களின்
இந்த முடிவால்
என்ன செய்வதென்று
புரியாமல் அதிர்ச்சியில்
உறைந்துப் போய் நிற்கின்றார்கள்....!!
--கோவை சுபா