தெரியாதே
விழுகின்ற
மழைத்துளிகளுக்குத் தெரியாது எத்தனை நிலங்கள்
தன்னால் விளையும் என்று...
சிந்துகின்ற
கண்ணீர்த் துளிகளுக்குத் தெரியாது
எத்தனை கவலைகள்
தன்னால் கரைந்து போகும் என்று...
சிதருகின்ற
வியர்வைத் துளிகளுக்குத் தெரியாது
எத்தனை கஷ்டங்களின்
வெளிப்பாடு என்று...
கொடுக்கின்ற
கரங்களுக்குத் தெரியாது
எத்தனை நன்மைகள் தன்னால் கிடைக்கும் என்று...
வீசுகின்ற
தென்றலுக்குத் தெரியாது
எத்தனை உள்ளங்கள்
இதமாக்கின்றன என்று...
மொழிகின்ற
வார்த்தைகளுக்குத் தெரியாது இதயத்தை சுகமாய் வருடுகின்றோமா? இல்லை ஈட்டியாய் தாக்கி கிழிக்கின்றோமா என்று...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா