வாழ்த்து

வலி தீர வரிவரியாய்
நான் கிறுக்கிடும் கிறுக்கல்களை
பிறர் விழியருகே கொண்டு
நிறுத்திடும் வேட்டைக்கு ஓர் வாழ்த்து.
ஆறு ஆண்டைக் கடந்து விட்டாய்
ஆறு கடல் மலை தாண்டி
பல நாடும் கண்டு விட்டாய்.
வேட்டையின் வேகம் குறையாது
சாட்டையாய் நின்று ஏளாம் ஆண்டிலும்
அடி எடுத்து வைத்து விட்டாய்.
உனக்கான ஆதரவும்
குறையவில்லை.
உனது பக்கங்களின் அழகும்
மங்கிடவில்லை.
பிறந்திடும் ஒவ்வொரு ஞாயிறுப்
பணியை நீ நிறுத்தவுமில்லை.
நாளாபக்கமும் சிறப்பான
வருகை குன்றவுமில்லை.
நீயோ அரசியலை அலசி விட்டு
இலக்கியத்தில் இளைப்பாறும்
சிறு பிள்ளை.
அறுசுவை உணவேந்தி அடுத்த
தெருமுனை வரை எடுத்துரைக்கும்
வண்ணத்தாள் முல்லை.
சினிமாவை தொட்டிடாத கிளை .
ஆனாலும் உமக்கு நிகரான
மின்னிதழ் இல்லை.
போகட்டும் உன் புகழ்
தேடி உலகத்தின் எல்லை.
நீ உலாவு நாள் வரை தமிழுக்கு
என்ன கவலை.
பாடுவேன் நானும் உன் புகழை.
தொடரட்டும் உன் சேவை
துள்ளட்டும் பலர் பார்வை
மிரளட்டும் தவறு எய்த பாவை
போற்றிட வைத்திடு பலரின் நாவை.