மக்கள் போர்
குரவலைகள் நசிக்கப்பட்ட போது வந்த மூச்சின் சுவாலையில் வெந்து அட்டூழியம்/
விரல்கள் நறுக்கப்பட்ட போது பரவிய குருதிப்பெருக்கில்
மிதக்கின்றது ஆனவம்/
நறுமணத்தை போக்கி
நரவாடை பூசிய கோடுங்கோல் ஆட்சியினருக்கு
மூச்சித்தின்றல்
தோன்றி எடுத்த விழிகளின்
ஈரப்படர்வால்
அந்த வானம் மெதுவாக ஒளிக்கீற்றுக்களை
தந்த வண்ணம் உள்ளது
அதர்ம பாதையில் சுமந்து கொண்ட
கர்மவினை இப்போது தாழ அமுக்கிக்கொண்டது
அடக்கி வைத்த அமுக்கங்கள்
ஓடுக்க நினைத்தோரை துவஞ்சம் செய்கின்றது
வெடிச்சத்தங்களை
மீறி ஒலித்த மரண ஒப்பாரிகள்
எச்சி விழுங்க ஈரம் இல்லாமல் வறண்டு போன நாவுக்கு
எங்கிருந்தோ விழுந்த ஒர் துளி நீர் போல
குளிந்து போன மனசு