கண்டபடி பேசுவதோ
கண்டவர்கள் சொன்னார்கள் இறைவன் இல்லையென்று
கண்டவரோ சொன்னனர் இறைவன் உள்ளாரென்று
சொன்னோரை சூழ்ந்தனர் உண்மை அதுவென்று
சொன்னோரை நம்பினர் உண்மை எதுவென்று
கண்டவர்கள் நின்றனர் தெருதோறும் சிலையாக
கண்டவர்கள் தெளிவித்தனர் சிலைபோல் இருந்தவரை
கண்டவர்கள் ஆயினர்
கடைசியில் தலைவராக
கண்டவரை நம்பினோர் காவியத்தை செய்தனர்
கண்டவர் சொல்லலாம் உள்ளதை கண்டபடி
கண்டவர் சொல்லுவாரோ பொய்யுரையை கண்டபடி
கண்டவர் சொல்லுக்கு கண்டபடி பொருளுண்டு
கண்டவர் சொல்லுக்கு கண்டதே ஒருவொருளாம்
கண்டவர் சொல்நோக்கும் திரவியத்தை இறுதியாக
கண்டவர் சொல்லெலாம் இறைவனை உணர்த்தவே
கண்டவரை படைத்ததும் கண்டபடி சொல்லவே
கண்டவரை படைத்ததும் கண்டதை ஏற்கவே
கண்டபடி பேசுவதோ உண்மையை கண்டுடவே
கண்டவர் பேசுவதோ உண்மையை மூழ்கவே
கண்டபடியோர் சொற்களையும் கண்டுணர்ந்தோர் சொற்களையும்
கண்மூடி ஏற்காதே கண்டுணர்ந்து தெளிவடை.
--- நன்னாடன்.