மக்கள் நல அரசு - சென்ரியு

சட்டம் ஒழுங்கு பிரச்னை
உள்துறை அமைச்சர்
பதவி பறிபோயிற்று!

உழைப்பாளிகள் தினம்
கொண்டாடப்படுகிறது
வேலை நிறுத்தப் போராட்டம்!

நெல் விவசாயி
அரிசி வாங்கினார்
வட்டிக்குக் கடன் வாங்கி!

மக்கள் நல அரசு
மதுபானம் விற்கிறது
இலவசங்கள் தருவதற்கு!

இரண்டு கை விரல்கள் கோர்த்து
பெரும்பாலான நேரங்களில்
செய்தி வாசிப்பாளர்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Sep-22, 4:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே