சித்தர் மருத்துவம்

நிலம் நீர் காற்று நெருப்பு ஆகாயம்
அண்டத்தின் உறுப்புகள்; அண்டத்தின்
ஓரணுவாய் மனிதன் அவன் உடலும் ,
இப்பஞ்ச பூதங்களால் ஆனவை யாம்;
அண்டத்தின் இயக்கமெல்லாம் பஞ்ச
பூதங்களின் ஒன்றிய இயக்கத்தால் எனின்
மனிதன் உடலும் அஃதொக்க கபம் வாதம்
பித்தம் இவற்றின் தன்மையால் இயங்க
மனிதன் வாழ்வும் நோயின்றி இல்லை
நோய் எதிர்த்து அல்லது நோயோடு
இயங்குவதை சித்தர் மருத்துவம் இயம்புவதை
பார்த்து படித்து வியந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Sep-22, 1:15 pm)
பார்வை : 422

மேலே