புதிய சமுதாயம்
பேரிரைச்சலும் பெரும் சப்தமும் தரும்
கொச்சை கொச்சையாய் ஏதோ ஏதோ
மனதில் தோன்றிய கீழ்த்தர எண்ணங்கள்
இன்றைய இளைஞர் விரும்பும் இசையும்
நடனமும் என்று கேட்டு உணரும்போது
நெஞ்சம் அதிர்கிறது எங்கே போகிறது
இந்த 'டிஜிட்டல்' உலகு .....
எங்கே போனது நேற்றைய உன்னத
சங்கீதம்.....நடனம்.....நாடகம் ...
தடம் புறந்ததேன் கலாச்சாரம்
இசையும் இலக்கியமும்
யார் இதற்கு பொறுப்பு.....
தம்மைத் தாமே 'பெரியவன்' என்று
பெரியோர் வார்த்தைக்கு கேளாது
தரு தலையாய் வாழ் நினைக்கும்
இன்றைய இளைய சமுதாயமா இல்லை
அவர்களை வெளிக்கொணர தெரியா
பழைய சமுதாயத்தினரா """????
பழையன கழிதல் புதியன புகுதல்
வரவேற்க தக்கதே.....ஆயின்
நல்லதையெல்லாம் கழித்தால்
வரும் புதியதில் மிஞ்சுவது எது ?
கழிசல்....
நாளையை நினைத்தால்....
புரியலையே....