வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம் - உண்மை விளக்கம் 20
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
வித்தியா தத்துவங்கள் ஏழும் விளம்பினோம்
சுத்தமாம் தத்துவங்கள் சொல்லக்கேள் – நித்தமாம்
சுத்தவித்தை ஈசுரம்பின் சொல்லும் சதாசிவம்நற்
சத்திசிவங் காணவைகள் தாம். 20
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
வித்தியா தத்துவங்கள் ஏழுஞ்சொன்னோம், சுத்தமாயிருக்கிற சிவதத்துவங்கள் ஐந்தையுஞ் சொல்லுகிறோங் கேள்,
அவை நித்தியமாயிருக்கிற சுத்தவித்தை ஈசுரம் பின்கூறும் சாதாக்கியம் நன்மையாகிய சத்தி சிவம் என்றறிவாயாக.