இல்லறத்தான் ஆகான் இயல்புகள் – அறநெறிச்சாரம் 166

நேரிசை வெண்பா

விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்துபோய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமேல்
இல்வாழ்க்கை யென்ப(து) இருள் 166

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

தன்பால் வந்த விருந்தினரை ஓம்பாமலும், இரப்பார்க்கு ஒன்று ஈயாமலும், பெருமையிற் சிறந்தோரையும் மதியாமலும்,

மனைவி மக்களைப் பிரிந்து சென்று அறிவு நூல்களைக் கல்லாமலும் தீவினையை மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின் அவனால் நடத்தப்பெறும் மனைவாழ்க்கை அவனுக்கு நரகமேயாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-22, 4:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே