சத்தி சிவம்கிரியை ஆதார ஞானவுரு வாம் - உண்மை விளக்கம் 21

திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா

சுத்தவித்தை ஞானமிகும் தொன்மையாம் ஈசுரந்தான்
அத்தன் தொழிலதிகம் ஆக்கியிடும் – ஒத்தலிவை
சாதாக் கியமென்றும் சத்தி சிவம்கிரியை
ஆதார ஞானவுரு வாம். 21

- உண்மை விளக்கம்

பொழிப்புரை:

சுத்தவித்தை ஞானமேறிக் கிரியை குறைந்திருக்கும், பழமையாகிய ஈசுவரத் தத்துவமானது சிவஞானங் குறைந்து கிரியை யேறியிருக்கும்,

சாதாக்கிய தத்துவம் ஞானமுங் கிரியையும் ஒத்திருக்கும்,

எப்போதும் சத்தி தத்துவம் கிரியையாயிருக்கும், சிவதத்துவம் ஆதார ஞானமாயிருக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Sep-22, 10:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே