மீண்டும் பிறப்பாயோ
மீண்டும் பிறப்பாயோ?
எழுது கோலை யெடுத்தேன்,
உந்தன் புகழ் பாடி,
உனை நினைவு கூற,
இன்று நீ மறைந்த நாளினிலே;
உனது நாட்டுப் பற்றைப் புகழவா?
அல்லது சொல்லாற்றலைப் புகழவா?
ஜாதி மத பேதமின்மயைப் புகழவா?
வஞ்சகர்களை இடித்துரைத்ததை புகழவா?
நெஞ்சம் எனது ஏன் நெகிழ்கிறது?
தொண்டை எனது ஏன் அடைக்கின்றது?
உயிருள்ளவரை பல நாட்கள் நீ பட்டினியில்,
அல்லலுற்று தவித்து நின்ற போதினில்,
பாவி நான் பிறக்காமல் இருந்துவிட்டேனே;
ஏழ்மையில் உன்னை உழல விட்டேனே.
பரிதவிக்கும் என் மனதில் கருணைக் கொண்டு,
மீண்டுமொருமுறை பிறப்பாயோ?
சம்பத் குமார்