கனவுப் பூக்களை

ஓவியம் எழுதுதுஉன் விழிகள்என் உணர்வுகளில்
காவிரி அலைபோல் தாவிடும் காதலால்
பூவிலும் மெல்லிய உன்புன்னகை செவ்விதழ்கள்
தூவுது நெஞ்சில் கனவுப் பூக்களை !


ஓவியம் தீட்டுது உன்விழிகள் என்உணர்வில்
காவிரி பூஅலைபோல் தாவிடும் காதலால்
பூவிலும் மெல்லியஉன் புன்னகை நெஞ்சினில்
தூவுது பூங்கனவி னை !

ஓவியம் தீட்டுது உன்விழிகள் என்உணர்வில்
காவிரி பூஅலைபோல் காதலால் -- தேவியுன்
பூவிலும் மெல்லிய புன்னகை நெஞ்சினில்
தூவுது பூங்கனவி னை !

யாப்பார்வலர்கள் குறிப்பு :
முறையே கலிவிருத்தம் ஒரு விகற்ப இன்னிசை நேரிசை வெண்பாக்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-22, 7:57 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kanavup pookkalai
பார்வை : 107

மேலே