Thudaippam

பாட்டன் போட்ட விதையதுவே
பத்திரமாய் முளைத்திருந்தேன்
பத்து வருட இடைவெளியில்
பக்குவமாய் வளர்ந்திருந்தேன்

சின்ன சின்ன குழந்தையெல்லாம்
சிரித்துகொண்டு பார்க்கையிலே
சீசன் ஏதும் இல்லாமல்
சில்லரையை கொடுத்திருந்தேன்

குருவிகூட்டம் குயில் கூட்டம்
கூடிவந்து பார்க்கையிலே
வாட்டமில்லா முகத்தினையே
வருடம் முழுதும் வைத்திருந்தேன்

அழகான பெண்களெல்லாம்
அண்ணாந்து பார்க்கையிலே
ஆகாயம் போல் வளர
ஆர்வமாக நானிருந்தேன்

தென்னை நார் பிரித்தெடுத்து
விளக்கமார் செய்கையிலே
வீதியெல்லாம் சேவைசெய்யும்
விதியெனக்கா? என்றிருந்தேன்

வாழ்க்கை எனும் வட்டத்திலே
வரவு செலவு இரண்டுமுண்டு
ஈடுஇனை இலா தொழில்
இறைவனது வரமென்றேன்

குப்பைகூள வீதியெங்கும்
கூட்டிவிட்டு பார்க்கையிலே
சுத்தமான வீதி கண்டு
சுகமாக வேலை செய்தேன்.

எழுதியவர் : கண்ணன் செல்வராஜ் (11-Sep-22, 6:52 pm)
சேர்த்தது : Kannan selvaraj
பார்வை : 80

மேலே