விரைவுடன் வாக னங்கள் வேங்கைபோல் செல்லும் போது - அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆறு சீர்கள் நான்கடிகள் மட்டும் இருந்தால் அறுசீர் ஆசிரிய விருத்தம் என்று சொல்லிவிட முடியாது. இராமாயணம், வில்லி பாரதம், தேவாரம், திருவாய்மொழி, தேம்பாவணி, சீறாப்புராணம் போன்ற பல்வேறு இலக்கியங்களில் வெவ்வேறு வாய்பாடுகளில் சுமார் 30 வகை அறுசீர் ஆசிரிய விருத்தங்கள் உள்ளன. எந்தவொரு வாய்பாடும், சீரொழுங்கும் இல்லாத வகைகளில் சில ஆண்டுகளுக்கு முன் நானும் எழுதிப் பதிந்திருக்கிறேன். அவைகளில் தவறானவற்றை அறிந்து அவற்றைச் சரி செய்தும், நீக்கியும் வருகிறேன்.

கீழேயுள்ள பாடல் எளிமையான முதல்வகை தக்க வாய்பாடுடன் தந்திருக்கிறேன்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 3 மோனை அமைத்திருக்கிறேன்)

விரைவுடன் வாக னங்கள்
..வேங்கைபோல் செல்லும் போது
வரிசையாய்ச் செல்வ தில்லை;
..வாகனம் ஒன்றுக் கொன்று
துரிதமாய்ச் செல்ல வெண்ணித்
..தூரமாய்ப் பார்வை வைத்து
கரிசனங் கொண்டார் போலக்
..கடக்கவும் முயற்சிப் பாரே!

– வ.க.கன்னியப்பன்

புதிதாக விருத்தம் எழுத விரும்புவோர் இதை அடிப்படையாக வைத்து எழுத முயற்சிக்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Sep-22, 11:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே