நிலா

வானப்பெண்
இரவில் சூடிய
சந்தனப்பொட்டு

விண்வெளி வீதியில்
உலா வரும்
ஒளிக்கதிர்

நட்சத்திரத் தொண்டர்கள்
புடைசூழ
இரவு மைதானத்தில்
பேரணி நடத்தும்
பெருந்தலைவர்

கறுப்புத் தட்டில்
கணக்கற்ற நட்சத்திரக்
கற்கண்டுகள் நடுவே
வைக்கப்பட்ட லட்டு


வள்ளுவன் முதல்
வைரமுத்து வரை
கவிஞர் பலருக்கு
சேதிகள் பல சொன்ன
போதிமரம்

இருட்டைப் போக்கும்
ஒளியை
இரவல் வாங்கியேனும்
இப்பூமிக்கு
ஈந்தளிக்கும் வள்ளல்

வான ஏட்டில்
இறைவன் எழுதிய
இணையிலா
இயற்கை கவிதை








எழுதியவர் : டி.என். முரளிதரன் (9-Oct-11, 7:44 am)
சேர்த்தது : T.N.MURALIDHARAN
Tanglish : nila
பார்வை : 328

மேலே