வாழ்க்கை
வாழ்ந்த வாழ்க்கையை
திரும்பிப்பார்
பெற்ற அனுபவங்கள் புரியும்...!!
வாழும் வாழ்க்கையை
நிமிர்ந்து பார்
வாழும் வழிகள் புரியும்...!!
உன்னை சுற்றியுள்ள
மனிதர்களின்
வாழ்க்கையை பார்
யதார்த்தம் புரியும்...!!
வாழும் வாழ்க்கையை
உனக்குள் நினைத்துப்பார்
வாழ்க்கையின்
உண்மை நிலை
உனக்கு புரியும்...!!
--கோவை சுபா

