மலரும் விரிய மகிழ்வும் பெருகுதே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(புளிமா 3 கருவிளம்)
(1, 3 சீர்களில் மோனை)
மலரும் விரிய மகிழ்வும் பெருகுதே;
இலையில் பனியும் இனிதே துயிலுதே!
உலவும் நிலவும் உயரே வருகுதே;
உலகில் துயிலா உனது நினைவினில்!
- வ.க.கன்னியப்பன்
கருத்து: கவின் சாரலன்