தந்தை காத்திருப்பு

கண்ணே என் இரு இமை செல்வங்களே
உன்னை பள்ளிக்கு அனுப்பிய இரண்டு மணிநேரம் எனக்கு இரண்டு யுகமாய் தெரிவதேனோ...

பள்ளிக்கூட வெளி சுவரிடம் கேட்டுப்பார் என் கண்கள் தேடிய கதை சொல்லும்..

என் தொப்புள் கொடியில் நீ வளரவில்லை ஆனால் என் தொப்புள் கொடி பதைகிறது வகுப்பறையில் நீ அழுவாயோ என்று.. இருப்பினும் சாந்தம் அடைகிறது என் மனம் இதுதான் உன் சுடர்விடும் வாழ்விற்கு முதல் படி என்று...



முதல் நாள் பள்ளிக்கூடம் சென்ற பிள்ளைகளுக்காக காத்திருக்கும் தந்தை....

எழுதியவர் : Pothirajan (8-Nov-22, 5:51 am)
சேர்த்தது : Pothirajan
பார்வை : 84

மேலே