நெய்பயந்த பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா மேலுலகம் எய்து பவர் – அறநெறிச்சாரம் 194

பல விகற்ப பஃறொடை வெண்பா

இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற அறிவுடைமை - கைவிளக்கின்
நெய்யேதன் நெஞ்சத்(து) அருளுடைமை - நெய்பயந்த
பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா
மேலுலகம் எய்து பவர் 194

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

இவ்வுலகம் அறியாமை என்னும் இருளால் நிறைந்ததேயாகும்,

ஞான நூல்களை கற்றதனலாய அறிவுடைமை அவ்விருளைப் போக்கும் கைவிளக்கே ஆகும்;

மனத்திலுள்ள அருள் அவ்விளக்கெரித்தற்குக் காரணமாகிய நெய்யேயாகும்,

நெய்க்குக் காரணமாகிய பால்போன்ற தூய ஒழுக்கமுடையவரே துன்பமற்ற வீட்டுலகத்தினை யடைபவராவர்.

குறிப்பு:

ஒருவன் கல்வியறிவு ஒளியாலும் நெஞ்சதது அருளாலும், தூய ஒழுக்காலும் மேலுலகம் எய்துவன் என்பது கருத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Nov-22, 8:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே