திருவடி மலர்களைச் சேர்ந்து முகர்வதே மூக்காம் - - அறநெறிச்சாரம் 201

நேரிசை வெண்பா

சாந்தும் புகையும் துருக்கமுங் குங்குமமும்
மோந்தின் புறுவன மூக்கல்ல - ஏந்தின்
அலங்குசிங் காதனத்(து) அண்ணல் அடிக்கீழ்
இலங்கிதழ் மோப்பதாம் மூக்கு 201

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

சந்தனம், அகிற்புகை, கத்தூரி, குங்குமப்பூ முதலியவற்றை முகந்து மகிழ்வன மூக்கன்று; உயர்ந்து இனிது விளங்குகின்ற சிம்மாதனத்தில் எழுந்தருளியிருக்கும் அருகனின் திருவடிகளிற் பெய்து விளங்குகின்ற மலர்களை முகந்து இன்புறுவதே மூக்காம்.

குறிப்பு: அலங்கு - விளங்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 11:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே