349 அறிவிற் பெரியோர் அனைவரையும் பணிவர் – இனிய சொற்கூறல் 6
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச் சீர் வரலாம்)
தேமலி சுவைக்கனி பலசெ றிந்துயர்
காமரம் வளைதல்போல் கலையு ணர்ந்திடு
தூமன மாட்சியோர் தொழுவர் யாரையும்
பாமர ரெவரையும் பணிந்தி டார்களே. 6
– இனிய சொற்கூறல், நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”தேன் மிகுந்த சுவையுள்ள கனிகள் பல நிறைந்து உயர்ந்து வளரும் சோலைமரங்கள் வளைவது போன்று நிறைந்த கல்வியுணர்ந்த தூயமன மாண்புடையோர் எல்லாரையும் தொழுது வணங்குவர்.
கல்வி அறிவு இல்லாத கீழோர் எவரையும் தொழுது வணங்க மாட்டார்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
தே – தேன், இனிமை. கா - சோலை.
பாமரர் - அறிவிலாக் கீழோர். பணிதல் - தொழுதல்.