உலக அரசியல்
அமெரிக்கா மகுடி ஊதுகிறது வாயில்
அரவம் ஆடுகிறது ஐரோப்பா வடிவில்
பிரிட்டன் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆண்டது
பிரிவினையே இப்போதும் தொடர்கதையே.
கடன்பட்ட நாடுகளெல்லாம் தற்சுயம் மறந்து
உடன்பட வேண்டியிருக்கும் அநியாயத்திற்கு - தரணியிலே
உலக(அ)ரசியல் செய்யும் அநீதியை தண்டிக்க
கலகம் வேண்டும் மனதிலே.