இவ்வித நோய்க்குத் தயிர் கூடாதெனல் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
குட்டமதைப் பக்கிநோய் குன்மங்கா மாலைமந்தந்
துட்டவிடூ சிக்களச்சூர் சோபைகபங் - கெட்டசுர
மீரமிவை பீநசம்பி லீக(ம்)புண்பாண் டோடதி
சாரமிவைக் கில்லை ததி
- பதார்த்த குண சிந்தாமணி
குறை நோய், வீக்கம், கண்ணோய், வாதகுன்மம், காமாலை, மந்தம், துட்டவிடுசி, களப்பிணி, சோபை, கபம், விடசுரம், பீநசம், பீலிகம், கிரந்தி, பாண்டு, பேதி இவைகளுக்குத் தயிர் கூடாது