மெல்லிடை அசைந்த போழ்தே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)

அல்லியும் வண்ண வண்ண
..அழகிய மலர்க ளோடு
மெல்லிடை அசைந்த போழ்தே
..மேகலை யுந்தா னாடும்!
கல்லினில் வடிக்க எந்தக்
..கலைஞனும் முயலு வானோ?
சொல்லினில் வடிப்பேன் நானே
..சொந்தமாய் ஆக்கு வேனே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-22, 1:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே