இவ்வித நோய்க்கு நெய் கூடாதெனல் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

தருணசுரஞ் சந்நி சலதோடந் தோட
மரண,ம கோதரமா நாகம் - வருணவதி
சாரங்க வீனவுரை தாவரிக்குன் மங்களுக்(கு)ஆ
தாரங் கவினவுரை தள்

- பதார்த்த குண சிந்தாமணி

தருணசுரம், சன்னி, நீர்க்கோவை, சப்த தோடம், பெருவயிறு, ஆநாகம், பேதி உடன்தோன்றும் வாதம், குன்மம் இவை அதிகமாவதற்கு நெய்யே காரணமாதலால் அதனைத் தள்ளுவாயாக

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-22, 11:33 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே