அவள் ஒரு முடிவில்லா பயணம் -5
கார்த்திகா வேலை தேடி வருகிறாள் ஆனால் எங்கும் வேலைய அவளுக்கு கிடைக்கவில்லை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறாள் உதவி செய்ய யாரும் இல்லை எப்படியாவது ஒரு வேலை கிடைக்க வேண்டும் நானும் என் குழந்தையும் நன்றாக வாழ வேண்டும் என கார்த்திகா நினைக்கிறாள் பண்ணையார் அதற்குள் தன் மகளை பார்க்க வேண்டும் பாரதியை பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது போய் பார்த்துவிட்டு வரலாம் என பூங்கோதையும் பண்ணையாரும் ஊருக்கு வருகின்றனர் பண்ணையார் வந்து பாரதி பாரதி என கூப்பிடுகிறார் என்ன நம் அப்பாவின் குரல் போல் இருக்கிறதே என ஓடி வந்து பார்க்கிறாள் அப்பா அம்மா வாருங்கள் என்ன அதிசயம் திடீரென வந்திருக்கிறீர்கள் என்ன விசேஷமா எல்லாம் வாசலில் நின்றே கேட்பாயா? உள்ளே வாருங்கள் என அழைக்க மாட்டாயா என ப் பூங்கோதை கேட்கிறாள் உள்ளே வாங்கள் வாங்கலப்பா அம்மா என அழைத்துக் கொண்டு போகிறாள் வீடு நன்றாக இருக்கிறது எல்லாம் வசதியும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் போலிருக்கிறது என பண்ணையார் சொல்கிறார் ஆமாம் அப்பா இங்கு தான் அவர் கல்யாணத்திற்கு முன்னே இருந்திருக்கிறார் நான் வந்த வாட்டியும் இங்கேதான் வீடெல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை எல்லாம் வீட்டுக்குள்ளேயே எல்லாம் சௌரியமாக இருக்கிறது அதனால் வெளியில் எதுவும் தேவையில்லை போக வர வேண்டிய வேலையே இல்லை சந்தோஷமாக இருந்தால் போதும் அம்மா நான் நம் ஊரில் நான் ஒரு அரசாங்க வேலையில் இருக்கும் மாப்பிள்ளைக்கு என் மகளை கட்டிக் கொடுத்து விட்டேன் அதனால் எனக்கு எந்த கவலையும் இல்லை என்று சொல்லி பெருமைப்படுகிறேன் மாப்பிள்ளை உன்னை நல்லா தானே வைத்திருக்கிறார் எந்த பிரச்சினையும் உனக்கும் மாப்பிள்ளைக்கும் இல்லைதானே என பண்ணையார் கேட்கிறார் எதுவும் இல்லை அப்பா அவர் ரொம்ப நல்லவர் எந்த பிரச்சினையும் இல்லை என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் போதும் போதும் இந்த ஒரு வார்த்தை போதும் நான் சந்தோஷமாகவே இருக்கிறேன் என பண்ணையார் சொல்கிறார் பூங்கொடி மாப்பிள்ளை எங்கே எப்பொழுது வருவார் என கேட்கிறாள் அவர் வேலைக்கு போய் இருக்கிறார் சாயந்திரமாகத்தான் வருவார் நீங்கள் வரேன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அவர் வீட்டில் இருந்திருப்பார் சரி இப்பொழுது மட்டும் என்ன இருங்கள் அவர் வந்த பின் பார்த்துட்டு போகலாம் என சொல்கிறாள் இல்லைமா மாப்பிள்ளை வரட்டும் இருந்துதான் பாத்துட்டு தான் போகிறோம் என பூங்கொடி சொல்கிறாய் வேலை இருக்கிறது நாங்கள் ஊருக்கு போக வேண்டும் பார்க்கலாம் என தான் வந்தோம் பார்த்து விட்டோம் தானே அதனால் நாங்கள் அப்புறம் வந்து உன்னையும் மாப்பிள்ளை பார்த்துக் கொள்கிறோம் என பண்ணையால் சொல்கிறார் உடனே ஊருக்கு போக வேண்டும் என ஆரம்பிக்கிறீர்கள் ஒரு பொறுமை என்பதே உங்களிடம் இருக்காதா என பாரதி கேட்கிறார் நல்லா பேசுகிறாய் பாரதி சின்ன பெண் என்று நினைத்தேன் கல்யாணம் ஆனதும் பெரிய பெண்ணாக மாறி விட்டாயா என பண்ணையார் கேட்கிறார் இல்லையப்பா நான் எப்பொழுதும் உங்கள் பெண்தான் கல்யாணம் ஆனாலும் இல்லை என்றாலும் நான் பாரதி பாரதியாக தான் இருப்பேன் யாருக்காகவும் மாற மாட்டேன் என சொல்கிறார் ரொம்ப தைரியமாகத்தான் இருக்கிறாய் பாரதி எனக்கு சந்தோசமாக இருக்கிறது என பூங்கொடி சொல்கிறாய் என்ன செய்வதும்மா நீ தான் அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் எதுவாக இருந்தாலும் சரி சரி என்ற ஒத்த வார்த்தையில் முடித்து விடுவாய் அதேபோல் நான் இருக்க முடியுமா வாழ்ந்தால் தானே வாழ்க்கையின் அருமை தெரியும் அதுதான் நான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என பாரதி சொல்கிறார் என்ன உன் வார்த்தையில் ஏதோ பொடி வைத்துப் பேசுவது போல் தெரிகிறது என பண்ணையார் கேட்கிறார் எந்த பொடியும் என்னிடம் இல்லை வேண்டுமென்றால் சொல்லுங்கள் உங்களுக்கு மூக்குப்பொடி வேண்டுமென்றால் வாங்கி வந்து தருகிறேன் என பாரதி சொல்கிறாள் என்ன அப்பாவை இப்படி எல்லாம் கிண்டலாக பேசுகிறாய் என பூங்கொடி கேட்கிறாள் இல்லை அம்மா சும்மாதான் பேசுகிறேன் இருங்கள் உங்களுக்கு போய் நான் டீயா காபியா எது வேண்டும் போட்டுக் கொண்டு வருகிறேன் என கேட்கிறாள் எது கொண்டுவந்து தந்தாலும் சரி உன் அம்மா போடுவதற்கு நீ போட்டு கொடுத்தால் அது மிக சுவையாக இருக்கும் உன் அம்மா கையில் குடித்து குடித்து நாக்கே செத்துப் போய்விட்டது நீயாவது நன்றாக போட்டுக் கொண்டு வா பாரதி ஒரு நல்ல டீ என பண்ணையார் சொல்கிறார் நான் உங்களுக்கு போட்டுக் கொடுப்பது அவ்வளவு கேவலமாக இருக்கிறதா இனி உங்களுக்கு டீயும் இல்லை காபியும் இல்லை உங்கள் மகள் வீட்டிலேயே இருங்கள் என பூங்கொடி சொல்கிறாள் இது என்னடா அதிசயமாக இருக்கிறது வாயை திறந்து ஒரு வார்த்தை பேசாமல் இருக்கும் நீ இப்படி பேசுகிறாய் என்ன உன் மகளை பார்த்த தைரியமா அப்படியெல்லாம் இல்லை நீங்கள் சொல்லவும் எனக்கு சிறிதாக கோபம் வந்தது கோபம் எல்லாம் வரக்கூடாது வந்தால் என்ன ஆகும் என்று தெரியுமா ஒன்றும் இல்லை நான் எதுவும் சொல்லவும் இல்லை உங்களை எந்த வார்த்தையில் பேசவும் இல்லை என பூங்கொடி சொல்கிறார் உள்ளே வந்து பார்க்கிறாள் பாரதி. சரி என அப்பாவுக்கும் அம்மாவுக்கும் காபி போட்டு கொடுக்கிறாள் இருங்கள் மத்தியானம் சாப்பிட்டுவிட்டு தான் போக வேண்டும் என சொல்கிறாய் பண்ணையார் இல்லை அம்மா நான் கிளம்புகிறேன் எனக்கு வேலை நிறைய இருக்கிறது என எப்பொழுதும் போல் தன் புகழை பாடுகிறார் அதற்கு பாரதி ஒரே வார்த்தையாக இருங்கள் இருந்து அவரை பார்த்துவிட்டு போங்கள். இப்ப என்ன உங்களுக்கு அவசரம் அப்படி போக வேண்டும் என்றால் அதற்கு மேல் உங்கள் விருப்பம் நான் உங்களை ஒன்றும் கட்டாயப்படுத்த மாட்டேன் என சொல்கிறாள் சரி சரி நீ எவ்வளவு கோபப்படுகிறாய் நான் இருந்தே மாப்பிள்ளையை பார்த்துவிட்டு போகிறேன் நீ போய் நல்லா வாய்க்கு ருசியாக சமைத்து போடு நான் மாப்பிள்ளை வந்ததும் அவர் உடன் சேர்ந்து சாப்பிடுகிறோம் என பண்ணையார் சொல்கிறாள் சரி இருங்கள் நான் போய் மார்க்கெட்டில் என்ன வேண்டுமோ அதை எல்லாம் வாங்கிக் கொண்டு வருகிறேன் என பாரதி கடைக்குப் போகிறாள் கார்த்திகா வேலை தேடி தேடி அலைந்து திரிகிறாள் எந்த இடத்திலும் அவள் நினைக்கும் வேலை கிடைக்கவில்லை அசந்து போய் ஒரு இடத்தில் உட்கார்ந்து விடுகிறாள் என்ன செய்வது கடவுளே நீ தான் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறாள் சரி என ஒரு ஆட்டோவில் ஏறுகிறாள் கார்த்திகா ஏரி வரும்போது அதே ஆட்டோவில் நிறுத்தி கதிர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என ஏறுகிறான் கார்த்திகாவை பார்த்ததுமே ஏறத் தயங்குகிறான் அதற்கு ஆட்டோக்காரர் ஏறுங்கள் சீக்கிரமாக நேரம் ஆகிறது தானே என சொல்கிறார் இல்லை நான் இந்த பக்கம் போக வேண்டும் என வார்த்தையை இழுக்கிறான் ஆட்டோக்காரன் அந்த பக்கம் தான் போகிறோம் நீங்கள் எங்கு போக வேண்டுமோ சொல்லுங்கள் அங்கு உங்களை இறக்கிவிட்டு நாங்கள் போகிறோம் என சொல்கிறார் இல்லை நான் வேற ஆட்டோவை பார்க்கிறேன் என கதை சொல்கிறான் நீங்க கொடுக்கிற பத்து ரூபாய்க்கு வேற ஆட்டோ வேற பஸ் ஏறினால் எனக்கு ஒரு பத்து ரூபா கிடைக்கும் தானே ஏன் இப்படி செய்கிறீர்கள் என ஆட்டோக்காரர் பேச சரி சரி நீங்கள் கோபம் கொள்ளாதீர்கள் நான் ஆட்டோவில் ஏறுகிறேன் கார்த்திகாவும் கதிரை பார்க்கிறாள் கதிரும் கார்த்திகாவை பார்க்கிறான் என்னடா இது இவளையே பார்க்க வேண்டியதாக இருக்கிறது இவளை மறந்து விட்டு நிம்மதியாக வாழலாம் என்று நினைக்கும் போது நேற்றும் இவளை பார்த்தோம் இன்றும் இவளை பார்க்கிறோம் என்னதான் இது கடவுளின் விளையாட்டு என புரியாமல் இருக்கிறதே என அவன் நினைக்கிறான் கார்த்திகாவும் என்னடா இது தர்ம சங்கடமாக இருக்கிறது யாரைப் பார்க்கக் கூடாது என நினைக்கிறோமோ அவனையே திரும்பத் திரும்ப பார்க்க வைக்கிறாது எப்படி இப்பொழுது பேசாமல் இருப்பது ஏதாவது தப்பாக நினைப்பான் நேற்று இவன்தான் மருத்துவமனையில் நம்மை சேர்த்து காப்பாற்றினான் பேசினாலும் ஏதாவது தப்பாக நினைத்தால் என்ன செய்வது யாரவது என் கணவர் ரவிடம் சொல்லிவிட்டால் அது பெரிய பிரச்சனையாகிவிடும் இப்படியெல்லாம் கடவுளின் விளையாட்டு இருக்கும் என தன் மனதுக்குள்ளயே நொந்து கொள்கிறாள் சிறிது நேரம் அமைதியாக வந்த கதிர் ஹாய் கார்த்திகா என்ன எங்க போயிட்டு வருகிறாய் உன் அம்மா வீட்டுக்கா என அவனே பேசுகிறான் என் அம்மா வீட்டுக்கு தான் போயிட்டு வருகிறேன் உன் வீட்டுக்காரர் வரவில்லையா அவருக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது அதனால் தான் நான் போயிட்டு வருகிறேன் என கார்த்திகா சொல்கிறாள் ஓ அப்படியா சரி உன் வேலை எப்படி இருக்கிறது கதிர் என கேட்கிறாள் பத்தாம் தேதிக்குள் சம்பளம் ஏதோ வருகிறது ஏதோ வாழ்க்கை போகிறது உனக்கு கூட கல்யாணம் ஆகிவிட்டது என கேள்விப்பட்டேன் சந்தோஷமாக இருந்தது கதிர் ஆமாம் என் மனைவியின் பெயர் பாரதி கல்யாணம் செய்து கொண்டேன் சந்தோஷமாக நீ வாழ வேண்டும் எனத்தான் நினைக்கிறேன் கதிர் கார்த்திகா உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது என் வாழ்க்கையும் நல்லா தான் இருக்கிறது என் வீட்டுக்காரர் பெயர் ரவி என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் எந்த பிரச்சனையும் இல்லை ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் என சொல்கிறாள் அதைக் கேட்டதுமே கதிருக்கு என்னடா இவள் சொல்லுவதே ஒரு வித்தியாசமாக இருக்கிறது என நினைக்கிறான் குழந்தை ஏதாவது இருக்கா கார்த்திகா என கேட்கிறான் ஒரு பெண் குழந்தை இருக்கிறது என கார்த்திகா சொல்கிறாள் ரொம்ப சந்தோஷம் கார்த்திகா என கதிர் சொல்கிறான் உனக்கு எனக்கு இப்பொழுதுதான் கல்யாணம் ஆகி ஒரு ஆறு மாதம் ஆகிறது வேலைக்கு ஏதாவது போகிறார்களா கதிர் இல்லை கார்த்திகா வீட்டில் தான் இருக்கிறார் சரி என் இடம் வந்து விட்டது நான் இறங்கிக் கொள்கிறேன் ஆனால் கார்த்திகா பிரச்சனை அது அவளால் சொல்ல முடியவில்லை கதிர் கார்த்திகா வாழ்க்கையில் ஏதோ பிரச்சினை அதை எப்படி கேட்பது கேட்பதும் தவறாக இருக்கும் என அவன் மனதுக்குள்ளயே சொல்லி கொள்கிறான் சரி ஆனாலும் நம் வேலையை பார்க்கலாம் என வீட்டுக்கு வருகிறான் கார்த்திகா கதிரை கல்யாணம் செய்து இருந்தால் ஆவது சந்தோஷமாக இருந்திருக்கலாம் நம் காதலை பிரித்து வேறு ஒருவருக்கு கல்யாணம் செய்து வைத்து அவர் சந்தேகம் கொடுமை என வாழ்ந்து இதெல்லாம் ஒரு வாழ்க்கையா காதலித்தால் விட்டு விட வேண்டும் இல்லை என்றால் கல்யாணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து விட வேண்டும் பிரித்து வேறு ஒருவரை கல்யாணம் செய்துகொண்டு வாழ்வது கொடுமை உண்மை சொன்னால் அவர் புரிந்து கொள்வார் என்று நினைத்தால் அவர் மிகவும் கோவக்காரராகவும் சந்தேகக்காரராகவும் அமைந்துவிட்டால் வாழ்க்கையே நரகம் ஆகிவிடும் என கார்த்திகா தன் மனதுக்குள்ளயே நினைத்துக் கொள்கிறாள் வீட்டிற்கு வரும் கதிர் வந்ததும் வீட்டுக்குள் நுழைந்தால் பண்ணையாரின் சத்தமும் சிரிப்பும் வாசல் வரை கேட்கிறது அதை பார்த்ததும் கதிருக்கு அதிர்ச்சி ஆகிறது நம் பேசாமல் இருப்பதனால் அவள் வர சொல்லி இருப்பாளோ ஏதாவது நமக்கும் அவளுக்கும் பிரச்சனை என சொல்லி இருப்பாளோ என்னவென்று தெரியவில்லையே ஒவ்வொருவர் வந்து நம் வாழ்க்கையில் விளையாடுவதே வேலை என் அம்மா அப்பா வந்து விட்டுப் போனார்கள் உடனே இப்பொழுது இவள் அம்மா அப்பா என்ன வாழ்க்கைடா எனக்கதிர் நினைக்கிறான் உள்ளே போகலாமா இல்லை இப்படியே எங்கேயாவது போகலாமா ஆனாலும் சரி போகலாம் என்னதான் நடக்கிறது என பார்க்கலாம் என உள்ளே வருகிறான் கதிரை பண்ணையார் மாப்பிள்ளை என கூப்பிடுகிறார் வருகிறேன் மாமா உங்களை பார்க்க தான் வந்திருக்கிறேன் எப்படி இருக்கிறீர்கள் மாப்பிள்ளை நல்ல இருக்கிறேன் மாமா என பதில் சொல்கிறான் இப்பொழுது தானே அவர் வருகிறார் அவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விடுங்கள் என பூங்கொடி சொல்கிறார் முகம் கழுவிக் கொண்டு வாருங்கள் சூடாக காபி குடிக்கலாம் என பண்ணையார் சொல்கிறார் நான் உங்களுக்கு காபி போட்டு வைக்கிறேன் என சொல்கிறாள் சரி என தலையை ஆட்டிக்கொண்டே கதிர் உள்ளே போகிறான் இவர்களை யார் வர சொன்னார்கள் இப்படி வந்து நம் உயிரை எடுக்கிறார் இவரை பார்த்தாலே எனக்கு வார்த்தை வர மாட்டேங்குது என்ன செய்வது எப்பொழுது கிளம்புவார் வேறு என்ன செய்வது தெரியவில்லையே என் அம்மா அப்பாவையாவது உடனே அனுப்பிவிட்டேன் இவர்களிடம் என்ன சொல்வது எப்படி இவர்களை அனுப்புவது கடவுளே நீ தான் காப்பாற்ற வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கும் போது பாரதி உள்ளே வருகிறார் வந்து கதவை தட்டுகிறாள் பேசவில்லை உடனே பாரதி சொல்கிறான் நீங்கள் எதுவும் கவலைப்பட வேண்டாம் நான் உங்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை நாம் எப்படி இருக்கிறோம் என பார்க்கத்தான் அம்மாவும் அப்பாவும் வந்திருக்கிறார்கள் அதனால் நீங்கள் என்ன எது என்று பயந்து கொள்ள வேண்டாம் நீங்கள் என்னிடம் பேசவில்லை என்ற விஷயம் உங்களுக்கும் எனக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது யாரிடமும் நான் சொல்ல மாட்டேன் என பாரதி சொல்கிறாள் அதைக் கேட்டதும் கதிருக்கு ஒரு சந்தோஷம் நம் மீது இவள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என ஆனாலும் அவன் ஏதும் பேசவில்லை அதனால் நீங்கள் எதுவும் நினைக்காமல் முகம் கை கால் கழுவிக் கொண்டு வாருங்கள் வந்து காபி குடிங்கள் அம்மா அப்பாவின் முன்னாடி பேசுவது போல் நடித்தால் போதும் இல்லையா சரி என தலையாட்டினாலாவது போதும் என பாரதி கேட்கிறாள் இப்பொழுது கூட வாயை திறக்க மாட்டீர்கள் உங்கள் இஷ்டம் ஆனால் என் வாழ்க்கை தான் ரொம்ப கஷ்டம் என சொல்லிக்கொண்டே வெளியே வருகிறாள் அதைக் கேட்டதும் கதிருக்கு சிரிப்புதான் வருகிறது அவள் போனவாட்டி சிரிக்கிறான் இவளோடு சேர்ந்து வாழ்ந்தாலும் வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கும் என தனக்குள்ளையே யோசிக்கிறான் பாரதி மீது லேசாக காதல் மலர்கிறது கதிருக்கு அந்த காதல் பூக்க வேண்டும் பூத்து பூக்கள் அதில் சிரிக்க வேண்டும் கார்த்திகா வீட்டுக்கு வந்து விடுகிறாள் வந்ததும் ஃபுல் குடியில் இருக்கும் ரவி என்ன போய் ஊர் சுற்றிவிட்டு வந்துட்டாயா யாரை பார்க்க போனாய் எவனை பார்க்க போனாய் என வார்த்தை மிகவும் தவறான வார்த்தையை பயன்படுத்துகிறான் அதைக் கேட்டதும் கார்த்திகாவிற்கு கோபமும் ஆத்திரமும் வருகிறது ஆனாலும் ஏதும் சொல்ல முடியாது என அழுது கொண்டே தன் வாயை மூடிக் கொள்கிறாள் குழந்தையைக் கொண்டு வரப் போகிறாள் குழந்தையை கொடுங்கள் என பக்கத்து வீட்டு பாட்டி இடம் இருந்து வாங்கிக் கொண்டு வருகிறாள் வந்ததும் குழந்தையோடு தன் ரூமுக்கு போகிறார் என்ன ஊர் சுத்தி விட்டு எதுவும் தெரியாமல் வந்ததுமே உன் ரூமுக்குள்ள போய் பூந்துகிட்டா நான் எதுவும் கேட்க மாட்டேனா எங்கடி போய்ட்டு வர உன் இஷ்டத்துக்கு நீ பாட்டுக்கு போற நீ பாட்டுக்கு வர ஏன் உன்னை கேட்க யாரும் இல்லையா நான் கேக்குறதுக்கு பதில் சொல்ல வேண்டும் கார்த்திகா என கோபப்பட்டு ரவி கத்துகிறான் இப்போ உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் நான் தான் வேலை தேடி தானே போயிருந்தேன் வேலை கிடைச்சுச்சா என் தலையெழுத்து வேலை இன்னும் கிடைக்கவில்லை அதனால் தான் வந்துவிட்டேன் சரிதான் உன் முன்னாள் காதலனை பார்த்திருந்தால் அவன் உனக்கு வேலை ஏற்பாடு பண்ணி இருப்பானே இப்படி கேவலமா பேச வேண்டாம் ஏன் இப்படி எல்லாம் பேசி உங்கள் மதிப்பை நீங்களே குறைத்துக் கொள்கிறீர்கள் என கார்த்திகா நிறுத்து உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் உன் காதல் அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம இப்ப சொல்லி என்ன டென்ஷன் பட வைக்க தானே மறைத்து வைத்து இப்ப கூட நீ சொல்லணும்னு சொல்லல நானா உன்ன வற்புறுத்தி கேட்கவும் தானே சொன்ன இந்த உண்மையை நீ முதலிலேயே சொல்லி இருந்தா நான் உன்னை நம்பி இருப்பேன் இவ ரொம்ப நல்லவன் நமக்கு ஏத்த பொண்டாட்டின்னு என் நம்பிக்கையை ஏமாத்திட்ட இல்ல என் பிராண்டு உன்ன பத்தி சொன்ன வாட்டி நான் வந்து உன்கிட்ட கேட்கவும் ஆமாம் நான் காதலித்தேன் என்று எவ்வளவு நடிப்புடா உன்கிட்ட தான்டி கத்துக்கணும் காதலிப்பது ஒரு பாவமா அப்படி நான் என்ன பாவம் பண்ணிட்டேன் நான் காதலிச்சேன் ஆனா எங்க வீட்ல எங்க அம்மா அப்பா விடல உங்கள பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க உங்களுக்கு உண்மையா இருக்கணும் உங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கணும்னு தான் நான் என் பழைய காதல நினைக்கவும் இல்ல அதை பத்தி உங்ககிட்ட சொல்லவும் இல்ல தேவையில்லாம அதை சொல்லி எதுக்கு நம்ம வாழ்க்கையில பிரச்சனை பண்ணனும் நிம்மதியா வாழலாம் நல்ல வாழ்க்கையா இருக்கே நீங்களும் நல்லவரா இருக்கீங்களோ அது ஒரு விஷயமா வச்சிக்கிட்டு எப்ப பாத்தாலும் எங்க போனாலும் யாரை பார்க்கிறேன் எவன் கிட்ட பேசுற நீ இப்படி சந்தேகப்பட்ட நானும் ஒரு பொண்ணு தானே எனக்கு மனசு இருக்குன்னு உங்களுக்கு தெரியாதா அது எவ்வளவு வேதனை படும் என்று உங்களுக்கு புரியாதா ஏன் இப்படி பேசுறீங்க உலகமகா நடிப்புடி போதும்டி நிறுத்துடி உன்னை விட பெரிய பெரிய ஸ்டார் எல்லாம் நான் பார்த்து இருக்கேன் நீ உன் குடும்பமே ஒரு நாடக குடும்பம் எங்க அம்மா சொன்னாங்க டேய் இவளை பார்த்து மயங்கி கல்யாணம் பண்ணி தொலைச்சுராதடா இவளை விட நல்லவளாவே பார்க்கலாம் இவள் சரியில்ல நான் தான் இல்லமா இந்த பொண்ணு நல்லா இருக்கு இந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேண்டும் என ரவி சொல்கிறான் நல்லா இருந்த வாழ்க்கை இப்படி மாறி போச்சு உன்ன கல்யாணம் பண்ண அதனால என் வாழ்க்கையே போச்சு என ரவி சொல்லி புலம்புகிறான் உங்கள் சந்தேக புத்தியால தான் நம்ம வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது தவிர இதற்கு வேறு யாரும் காரணமில்லை? ஊர்ல உங்க பிராண்டு சொன்னதெல்லாம் நம்புவீங்களா அவர் நான் காதலிச்சேன்னு சொன்னாரே நான் யாரை காதலித்தேன் எங்க பார்த்தாரு யாரை காதலிச்சேன் அவருக்கு தெரியுமா சொல்லுங்க அப்ப நீ எத்தனை பேரை காதலிச்ச சொல்லு சொல்லு சொல்லு கேவலமாகவும் பேச ஆரம்பிக்கிறான் அதைக் கேட்ட கார்த்திகா வேண்டாம் இத்தோடு இந்த பிரச்சனையை விட்டு விடலாம்.
தொடரும்...