இதயம் வருடும் இளநகையே
எதுகையும் மோனையும் ஏதுக்கடி
நல்இளநகை புரியும் ஈரிதழ் பேரழிலே
குறு நகை புரியும் குழல் சுருள் திருநுதலே
மாலை வரும் தேன்மதியழகே
எதுகையும் மோனையும் ஏதுக்கடி
இதயம் வருடும் இளநகையே
புதுநகை புரிவாய் புன்னகையே
மதியுடன் மாலை வருவாய்