292 கொடுமையும் களவும் கொள்வர் சோம்பரே – சோம்பல் 5
கலித்துறை
(மா மா விளம் மா காய்)
பாரெல் லாமாள் வேந்தரு நூல்தேர் பண்போருஞ்
சீரெல் லாஞ்சூழ் செல்வரு மந்தஞ் சேராரே
நேரில் லாமா பாதகர் தீனர் நெடுஞ்சோரம்
ஊரெல் லாஞ்செய்(து) உய்பவர் மாசோம் புடையாரால். 5
- சோம்பல், நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”உலகையாளும் பேரரசரும், கற்றுணர்ந்த பண்புடைய அறிஞர்களும், சிறப்பெல்லாம் நிறைந்த செல்வரும் சோம்பல் கொள்ள மாட்டார்கள்.
நேர்மையற்ற பெரும் பாதகரும், கொடியவரும், ஊரெல்லாம் பெருமளவு களவு செய்து வாழும் கள்வரும் உடல் உழைப்பு செய்யாது மிகவும் சோம்பலை உடையவர்களாவர்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
மந்தம் - சோம்பல். தீனர் - கொடியவர். சோரம் - களவு.