இடது பக்கமாகப் படுத்து காலை நீட்டி நித்திரை செய்வது - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஐந்திந் திரிய வசவுக் கியமகலும்
நைந்தமனத் துச்சாக நண்ணுங்காண் - பைந்தொடியே!
மேனீட்டும் ஆயுளுறு மெய்யின் அயர்வொழியுங்
கானீட்டிப் பள்ளிகொள்ளுங் கால் 1485

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

இடது பக்கமாகப் படுத்து காலை நீட்டித் துயில் கொண்டால் பஞ்சேந்திரியங்களில் அயர்வும், உடல் வருத்தமும் நீங்கும். மனத்திற்கு உற்சாகமும், ஆயுள் விருத்தியும் உண்டாகும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-23, 12:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே