புணர்ச்சி செய்யும் விதி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

அங்கமுற்றும் பாகியமாய் ஆர்வமொன்றாய் அன்பொன்றாய்
அங்கமுற்றும் போகமொன்றா யாருங்கால் - அங்கத்
துறையுஞ் சகசவிக லுற்றகரு விங்க
னறையும் பருவத் தவர் 1481

- பதார்த்த குண சிந்தாமணி

பொருளுரை:

நல்ல பருவமுள்ள ஆணும், பெண்ணும் உடல் முழுதும் மறைப்பில்லாமல் ஆசையோடும், அன்போடும் போகம் கொள்ளும் போது உண்டாகும் கருவானது நல்லபலமுடையதாகவும் நல்லதாகவும் அமையும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Feb-23, 12:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே