திண்ணமுடன் சொல்லுவயே தீர்வு - நேரிசை வெண்பா - ஏந்திசைச் செப்பல் ஓசை
ஒருவிகற்ப நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பல் ஓசை)
(1, 3 சீர்களில் பொழிப்பு மோனை)
கண்மயக்குங் காரிகையே காதலியே நீயுன்றன்
உண்ணோக்குக் கூறிடுவாய் உள்ளமதில் – எண்ணுகின்ற
எண்ணத்தை ஏற்றபடி என்னிடந்தான் இன்புறவே
திண்ணமுடன் சொல்லுவயே தீர்வு!
- வ.க.கன்னியப்பன்
ஈற்றடி ஈற்றுச்சீர் ’தீர்வு!’ தவிர மற்ற 12 சீர்களும் காய்ச்சீராக அமைந்தால் ஏந்திசைச் செப்பல் ஓசை எனப்படும்.