சிகரங்கள் காத்திருக்கு, சிதையாதே காரிகையே

பாரதி கண்ட கனவே
பாரதத்தின் புதுமையே...!

நீயென்பது அவர்களுக்கு
ஒற்றை உறுப்படி...
உனக்கு மட்டுமே நீ
ஆகச் சிறந்த வரமடி...!

அறிவென்பது உனக்கு
ஆயுதமடி...
அவர்களுக்கோ
ஆணவமடி...!

உழைப்பென்பது உனக்கு
உன்னதமடி...
அவர்களுக்கோ
உதாசினமடி...!

உனைக் கொண்டாட
ஊரார் வேண்டாமடி...
உன் உள்ளமொன்றே
போதுமடி...

உற்றமும் சுற்றமும்
வாழ்ந்தாலும் ஏசும்
தாழ்ந்தாலும் ஏசும்...!

விமர்சனங்களால் தளராதே
மண்ணல்ல உன் இலக்கு
விண்ணென்பதை மறவாதே...!

வலிகளால் சிதையாதே
வலிமை கொள் கண்மணியே...!

எழுதியவர் : Parveen (14-Mar-23, 7:40 pm)
சேர்த்தது : Parveen
பார்வை : 1358

மேலே