யார் குற்றம்

யார் குற்றம்.

வாழ்ந்திட்டேன் பலகாலம்,
எஞ்சியதோ சிலகாலம்!
பிள்ளைகளும் வளந்தாச்சு,
பேரன் பேத்திகள் கண்டாச்சு.

இப்பெல்லாம் என் பேச்சுக்கு
மதிப்பில்லை!
என் மனைவியும் கேட்பதில்லை!

காசிதனை என் மனம்
நினைத்தாலும்,
பாழாய்ப் போன என்
உடல் மறுக்கிறதே.

யாருடைய குற்றம் இது?
இந்த உடலையும் என்னுடன்
சேர்த்து படைத்தானே!
படைத்து அதற்கும் என்று
ஒரு சுகம் வைத்தானே
அவன் செய்த குற்றமது!

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (18-Mar-23, 1:24 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : yaar kutram
பார்வை : 69

மேலே