கள்ளவிழி மாதவளின் கண்களிலே - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(1, 5 சீர்களில் மோனை)
கிள்ளைமொழி கொஞ்சுமொழி என்பதெல்லாஞ்
..சிலநாள்கள் சேதி சொன்னேன்;
கள்ளவிழி மாதவளின் கண்களிலே
..கண்டுகொண்டேன் கள்ள மெல்லாம்;
உள்ளநெறி கண்டமட்டும் உன்மத்தம்
..ஆனேனே உள்ளுக் குள்ளே;
பள்ளியறை வருவாளோ பாந்தமுடன்
..சேர்ந்திடலாம் பார்வை யாலே!
- வ.க.கன்னியப்பன்