இன்னாயா நான் நாயா

ஒருத்தர்: சினிமாவில நடிக்கணும்னு ஆசைப்பட்டு வெறியுடன் பத்துவருடங்கள் நாய்போல தெருத்தெருவாக அலைந்தேன்.

இன்னொருத்தர்: அப்புறம் சினிமாவில நடிச்சீங்கள்ளா?

ஒருத்தர்: ஒரே ஒரு படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்து. அந்த டைரக்டர் கிட்ட அடிக்கடி போயி நாய்போல நின்னேன்.

இன்னொருத்தர்: அந்தப்படத்தில் நடித்தீர்களா?

ஒருத்தர்: நான் ஒவ்வொரு முறையும் அவரிடம் சென்றபோது, நாய் போல குறைத்து என்னை விரட்டிவிட்டார்.

இன்னொருத்தர்: அடப்பாவமே, நாய்போல தெருத்தெருவாக அலைந்த உங்களை நாய்போல குறைத்து விரட்டிவிட்டாங்களே.

ஒருவர்: ஆமாம், இருப்பினும் அந்த படத்தில் நான் நடித்துவிட்டேன்.
இன்னொருவர்: என்ன வேடம்?

ஒருவர்: ஒவ்வொருமுறையும் நான் ஒருவரது வீட்டிற்கு திருடச்செல்கிறேன். அவர் வீட்டு நாய் ஒவ்வொருமுறையும் என்னை பார்த்துக் குறைத்து என்னை திருடமுடியாமல் விரட்டிவிடுகிறது.

இன்னொருவர்: நீங்கள் சென்றபோது டைரக்டர் வீட்டில் நாய் இருப்பதாக சொல்லவில்லையே?

ஒருவர்: படத்தில் நாயை காட்டவில்லை. அதற்குப்பதில் நாயின் குரல் போல இருந்த டைரக்டர் குரலை பின்னணி ஒலியாக அமைத்து, நான் ஒவ்வொரு முறையும் அவர் வீட்டிலிருந்து ஓடுவதை, தொலைதூர ஷாட்டில் எடுத்து மிக்ஸ் செய்துவிட்டார்கள். படத்தில் என் முதுகு மட்டும்தான் தெரியும்.

இன்னொருவர்: அந்த காட்சிகளுக்கு உனக்கு என்ன பணம் கொடுத்தார்கள்?

ஒருவர்: பணத்திற்கு பதில், அவர்களின் அடுத்த படமான 'நாய் பூனையாகுமா' படத்தில் ஹீரோயினுடைய நாயை, காலை வாக்கிங் கூட்டிப்போகும் நாய் சேவகன் வேடம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொருவர், மியாவ் மியாவ் மியாவ் மியாவ் என்று கத்திகொண்டே தெருவில் ஓடுகிறார். ஒருவர் வள்
வள் வள் வள் வள் வள் என்று குறைத்தபடி இன்னொருவரின் பின்னால் ஓடுகிறார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (3-Apr-23, 3:42 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 118

மேலே