சிரித்தாலும் கண்ணீர் வரும்
ஒருத்தர்: இந்தப்படத்தைப் இடைவேளைவரை பார்த்து, சிரித்து சிரித்து எனக்கு வயிறு வலித்தது. அதன் பிறகு கடைசிவரை அழுததால் கண்கள் எல்லாம் வலிக்குது.
இன்னொருத்தர்: இந்தப்படத்தை எனக்கு சொல்லிக்காம தனியாக போய் என் மனைவி பார்த்துவிட்டு வந்ததால எனக்கு அழுது அழுது கண்ணெல்லாம் பழுதாகிவிட்டது.
ஒருத்தர்: அப்படீன்னா என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு இந்த படத்தை பார்த்தவங்க உங்க மனைவியா?
இன்னொருத்தர்: ஏங்க அப்படி சொல்லுறீங்க?
ஒருத்தர்: இந்த படத்தை சினிமா கொட்டகையில் பார்க்கும்போது, நான் எப்போதெல்லாம் சிரித்தேனோ, அப்போதெல்லாம் அந்தப்பெண் அழுதாங்க. நான் பட இடைவேளையின் போது அவங்களிடம் கேட்டேன் "தேவை பட்டா என் கர்சீப்பையும் உபயோகப்படுத்துங்க, ஆனால் இதை சொல்லுங்க, ஏன் இந்த சிரிப்பு படத்தைப் பார்க்கையில் நீங்க அழுறீங்க? அதுக்கு அவங்க சொன்னாங்க "நான் இந்த படத்தை என் கணவரிடம் சொல்லிக்காம பார்கவந்துட்டேன். படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, நான் வீடு திரும்பியபிறகு என் கணவருக்கு இந்த விஷயம் தெரிந்தவுடன், அவர் அழுது கதறுவதை நினைத்துப் பார்க்கையில் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்குது. அழுகையும் பொத்திக்கொண்டு வருகிறது. நான் மட்டும் தனியாக அழுதால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்பதால், நீங்கள் சிரிக்கும்போதெல்லாம் நான் உங்கள் கூடவே அழுதுவிடுகிறேன்" என்று சொன்னாங்க.
இன்னொருத்தர்: ஓ, அதனால்தான் இடைவேளைக்குப்பின் நீங்க படம் முடியும்வரை அழுதீங்களா?
ஒருவர்: ஆமாங்க, நான் கூட என் மனைவியிடம் சொல்லாமலேயே இந்த படத்திற்கு தனியாக வந்துவிட்டேன். ஆனால் உங்க மனைவி என்னிடம் உங்களைப்பற்றி சொன்னவுடன் "இடைவேளை வரை நான் சிரித்தேன் , நீங்க அழுதீங்க, இப்போ இடைவேளைக்குப்பின் நீங்க சிரிங்க நான் அழுகிறேன் "என்றதும் அவங்க ரொம்ப சந்தோசத்துடன் "இதுவும் நல்லா இருக்கு" என்று சொன்னார்கள். அதனால் உங்களின் மனைவியின் சிரிப்பை கேட்பதற்காக நான் அழுதுகொண்டே இருந்தேன்.
இன்னொருத்தர்: இதை கேட்கும்போது எனக்கு சிரிப்பாகவும் இருக்கிறது , அதே நேரத்தில் ரொம்ப அழுகையும் வருகிறது.
ஒருத்தர்: ???