கோயம்பேடு முத்துக்கள்
நன்கு உறங்கி எழுந்த பின்னர் என்ன புளிக்குழம்பு வைக்க வேண்டும்? பரங்கி.
சைவமாக இருந்தால் இந்தக்காயை தவிர்க்க வேண்டும்? முட்டை கோஸ்.
ஆண்டவன் அருளைப்பெற இந்தக்காயை உண்ணவேண்டும். உருளை.
பெருங்காயம் இல்லாம சமாளித்துவிடலாம். ஆனால் வெங்காயம் இல்லாமல் முடியாது.
எந்தக்காயை வெட்ட கத்தரிக்கோல் தேவையில்லை? கத்தரிக்காய்.
முள்ளங்கி வெட்டுவதற்கு முக்கிய தகுதி, உள்ளங்கி அணியவேண்டும்.
கடைத்தெருவுக்கு போனா வெறுங்கையுடன் வரக்கூடாது. முருங்கை மட்டுமாவது வாங்கிவரவேண்டும்.
சுண்டைக்காய் புளிகுழம்புக்கு ஏற்ற பொரியல் வெண்டைக்காய்.
பெரிய குடும்பமா இருந்தா பெரிய வெங்காயம். சின்ன குடும்பமா இருந்தா, சின்ன வெங்காயம்.
ரசம் வைக்க தக்காளி , புளிக்குழம்பு வைக்க மணத்தக்காளி .
" டேய், நான் கோயம்பேடு கோணியப்பன். ஏதாச்சும் தகராறு பண்ணே, விற்காம போன பழைய அழுகிய தக்காளியை உன் மூஞ்சில அப்பிடுவேன்"
"அட, உங்களை நான் ஒண்ணுமே சொல்லலைங்க, புளியமேட்டுல என்னோட மச்சான் ஒத்தன் வேல வெட்டி ஏதும் இல்லாம, சும்மா நக்கலா பேசிக்கின்னு அலையறான். அவனுக்குத்தான் சொன்னேன். நீங்க வாங்க, ரொம்ப அழுகாத பழைய தக்காளியை உங்களுக்கு பாதி விலையில் போட்டுத்தாறேன் "