ஒரு ஆஸ்பத்திரியில்

ஒரு நோயாளி டாக்டர் அறையில் நுழைகிறார். அங்கிருந்தவர் அவரிடம் " உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று கேட்கிறார்.

நோயாளி " தாங்க முடியாத வயிற்று வலி டாக்டர் ".

இன்னொருவர்: எத்தனை நாளாக இருக்கிறது?

நோயாளி: மூன்று நாட்களாக

இன்னொருவர்: அப்படி என்றால் ஏன் முன்பே வரவில்லை?

நோயாளி: என்ன செய்வது டாக்டர், தொழிற்சாலையில் வருடக் கடைசி என்பதால் விடுப்பு கிடைக்கவில்லை

இன்னொருவர்: ஏம்பா, உனக்கு உன் உடம்பு முக்கியமா இல்லை தொழில் முக்கியமா?

நோயாளி: தொழில் தான் டாக்டர். அப்போது தான் வருமானம் கிடைக்கும் . என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும்.

இன்னொருவர்: இதற்கு முன் இப்படிப் பட்ட வயிற்று வலி வந்ததா?

நோயாளி: ஓரிரு முறை வந்தது. ஆனால் இப்போது இருக்கிற கடுமை இருந்ததில்லை.

இன்னொருவர்: சரி, ஆகாரம் என்ன சாப்பிட்டாய்?

நோயாளி: தயிர் சாதம் வாழைப்பழம்

இன்னொருவர்: தயிர் சாதம் போதாதா, வாழைப்பழம் எதற்கு?

நோயாளி: எனக்கு சாப்பிடப் பிடிக்கும்.

இன்னொருவர்: அப்படி என்றால் இன்று இரவுக்கு ஒரு டஜன் வாழைப்பழம் சாப்பிட்டு நாளை மீண்டும் ஒரு டஜன் வாழைப்பழம் சாப்பிட்டு, நாளை மாலை இங்கு வா.

நோயாளி: ஏன் டாக்டர், இப்போது மருந்து எழுதித் தரமாட்டீங்களா?

இன்னொருவர்: நான் டாக்டராக இருந்தால் நிச்சயமாக எழுதிக் கொடுத்திருப்பேன்.

நோயாளி: அப்படீன்னா நீங்க யார்?

இன்னொருவர்: நான் இந்த ஆஸ்பத்திரி கட்டிடத்தின் சொந்தக்காரன். மூன்று மாத வாடகை பணத்தை இந்த டாக்டர் எனக்கு தரவில்லை. வருவதற்கு முன் அலைபேசியில் அழைத்து இங்கு வரப் போவதாகத் தெரிவித்து விட்டு வந்தது தப்பாகப் போய் விட்டது. டாக்டர் ஏதோ அவசர வேலையாக வெளியே சென்று விட்டார் என்று அவரது ஆஸ்பத்திரி பணிப்பெண் கூறினாள். இனியும் இன்று இந்த டாக்டர் வருவாரா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. உனக்கு வயிற்று வலி எனக்கு வயிற்றெரிச்சல்.

நோயாளி வயிற்றை பிடித்தபடி வெளியேறிக்கொன்டே "ஆஆஆஆஆ. வயிறு வலி தாங்க முடியவில்லை. ஏன்யா, விவரம் தெரியாத மடையர்கள் எல்லாம் ஆஸ்பத்திரிக்கு சொந்தக்காரனா இருக்கீங்க"

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (28-Mar-23, 8:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 127

மேலே