இறுதிச் சுற்று

மாயா ஜாலங்கள் நிறைந்த
மனிதனின் வாழ்க்கை
"இறுதிச் சுற்றில்"
சொல்லாமல்
கொள்ளாமல்
விடை பெறுகிறது

இதுதான் வாழ்க்கை
என்று புரியாமல்
ஆடாத ஆட்டங்கள் ஆடிய
மனிதனின் ஆட்டம்
மண்ணுக்குள்
அடங்கி விடுகிறது
"இறுதிச் சுற்றில் "....!!

உவமைக் கவிஞர் சுரதா
சொன்னது போல்

"இருப்போம் என்றே
நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ
திறக்கின்றான்"...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (4-Apr-23, 6:33 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : iruthich sutru
பார்வை : 169

மேலே