நிர்மூலமானதே
உலகைப் படைத்தான்.
உடலைப் படைத்தான்.
உயிரைத் தந்தான்.
துணையைத் தந்தான்.
நேருக்குநேர் நெகிழ்ந்தான்.
பேசினான்... மகிழ்ந்தான்.
படைப்பின் வெற்றியில்
இறுமாப்புடன் இறைவன்
தலை நிமிர்ந்தே நின்றான்.
ஒளிவு மறைவில்லா
நிர்வாணம் அங்கு
தெய்வீகமாயிருந்தது.
படைக்கப்பட்ட பெண்ணவள்
மாயையால் ஈர்க்கப்பட்டு..
துரோகத்தால் சூழப்பட்டு..
சபிக்கப்பட்ட கனியை
சுவைத்த நிமிடம்
இறைவன் அரூபனானான்.
அதை துணைக்கும்
கொடுத்து பாவியானாள்.
தெய்வீக குரலுக்கு
பதிலும் அளிக்காமல்...
மற்றவர்மேல் பழியும்
போட்ட நொடி அரூபன்
கல்லாய் போனானே...!
நிர்வாணம் நிர்மூலமானதே...!