பாவமும் நீங்கிடுமே பலநன்மை பெறுவோமே - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(கூவிளம் காய் 3)
காவிரி நதிக்கரையில் காண்கின்றோம் ஆலயங்கள்;
தீவினை நீங்கிடவே திங்கடொறும் போய்வருவோம்!
சேவடி வணங்கிடுவோம் சிந்தையிலே வைத்திடுவோம்;
பாவமும் நீங்கிடுமே பலநன்மை பெறுவோமே!
- வ.க.கன்னியப்பன்