மடையான் கறி - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
அன்னநடை பின்னுசடை அங்க(ண்)மட மாதேகேள்
வன்னமடை யான்கறியை மாந்தினர்க்குத் - துன்னு
கரப்பான் சொறிசிரங்குங் காணுமைய வாதம்
உரப்பாக நீடும் உரை!
- பதார்த்த குண சிந்தாமணி
பொருளுரை:
மடையான் கறியை உண்டால் கடுவன், நமைக்கிரந்தி, சிலேட்டுமம், வாதம் இவை உண்டாகும்.